#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லாக்டவுனில், காதலனுடன் கொஞ்சி குலாவும் புகைப்படங்களை வெளியிட்டு, இளசுகளை வெறுப்பேற்றிய ஸ்ருதிஹாசன்!!
தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் உலகநாயகன் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். அதனைத் தொடர்ந்து அவர் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சேலை என்ற நாடக கலைஞரை காதலித்து வந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2019ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இந்த நிலையில் சமீபகாலமாக ஸ்ருதி சாந்தனு என்பவரை காதலிப்பதாக தகவல்கள் பரவியது. மேலும் ஸ்ருதியும் இதை உறுதிபடுத்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தபட்டிருக்கும் நிலையில் சமூக வலைதள பக்கங்களில் பிசியாக இருக்கும் ஸ்ருதி, லாக்டவுனில் பெஸ்டியுடன் இருக்கிறேன் என கூறி அவருடன் நெருக்கமாக எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.