#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இன்ஸ்டாகிராம் லைவில் வந்து ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய சுருதிஹாசன்.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா.?
உலக நாயகனின் மகளான ஸ்ருதிஹாசன் பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படத்துறையில் பிரபல நடிகையாவார். மேலும் அவர் இசையமைப்பாளர், பாடகர், நடிகை என பன்முகத்திறமையை கொண்டவர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு தனது தந்தையின் இயக்கத்தில் வெளியான ' ஹே ராம் ' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் கால்பதித்த ஸ்ருதிஹாசன், 2013 ஆம் ஆண்டு சூர்யா நடித்து வெளியான ' ஏழாம் அறிவு' திரைப்படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி அதே ஆண்டு சிறந்த அறிமுக நடிகை விருதை பெற்றிருந்தார்.
மேலும் இவர் சுயமாக ஒரு இசைக்குழுவையும் நடத்தி வருகிறார். 2015 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'வேதாளம்' திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவ்வாறு பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த தனது நடிப்பு திறமையை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் இவர் சமீபத்தில் வெளியிட்டு இருந்த நேரலையில் பெயர் குறிப்பிடாமல் சிலர் தங்களுக்கு தாங்களே குழிகளை வெட்டிக் கொள்வதாகவும் அதில் குதிக்க காத்திருப்பதாகவும் கூறியிருந்தார். இப்பதிவு வைரலாகி ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.