#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பொதுமேடையில் கதறி கதறி அழுத சிலம்பாட்டம் நாயகி! இதுதான் காரணமா? ரசிகர்களை வேதனைக்குள்ளாகிய வீடியோ!
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான சிலம்பாட்டம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சனா கான். அதனை தொடர்ந்து அவருக்கு தமிழில் அதிகமான படவாய்ப்புகள் இல்லை. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவர் பாலிவுட் பக்கம் தாவிபல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் கவர்ச்சியான படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களையும் பெற்றார்.
இதற்கிடையில் சனா கான் தான் நடன இயக்குனர் ஒருவரை காதலிப்பதாக கூறி அவருடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் சனா கான் தனது காதலன் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு அவரை பிரிவதாக கூறி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
அதனை தொடர்ந்து தற்போது சனா கான் மீண்டும் படங்களில் நடிப்பதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார், மேலும் அவர் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார். அதன் புரோமோஷன் நிகழ்ச்சியில் தனது காதலனை பிரிந்தது குறித்தும், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக காதல் தோல்வியில் இருந்து மீண்டு வருவதாகவும் கூறி பொதுமேடையில் தேம்பித் தேம்பி அழுதுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.