#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பால் ஊத்த சொன்ன சிம்பு! மன்னிப்பு கேட்க்காவிட்டால் வழக்கு! அதிரடி திருப்பங்கள்!
தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகன் என்றால் அது நம்ம சிம்புதான். தற்போது சிம்பு மீது மேலும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் படம் வந்தால் ராஜாவாகத்தான் வருவேன். படத்தின் ஷூட்டிங் முடிவு பெற்றுள்ளநிலையில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தனது படத்திற்கு கட்டவுட் தேவை இல்லை, அதிக விலையில் டிக்கெட் வாங்க தேவை இல்லை, பாலபிஷேகம் செய்ய தேவை இல்லை என நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள சிம்பு, என் படத்திற்கு பெரிய அளவில் கட்டவுட் வையுங்கள், பால் பாக்கெட்டில் பாலபிஷேகம் செய்யாமல், பெரிய அண்டாவில் ஊத்துங்கள் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தற்போது அந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் சிம்பு பேசியது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மன்னிப்பு கேட்க்காவிட்டால் சிம்பு மீது வழக்கு தொடருவோம் என தமிழ்நாடு பால் முகவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.