#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் சிம்புவுக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா? என்ன செய்துள்ளார் என்று நீங்களே பாருங்க!
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. பொதுவாக சிம்பு என்றாலே சர்ச்சை என்பதுபோல ஏதவது ஒரு சர்ச்சை அவரைப்பற்றி இருந்துகொண்டேதான் இருக்கும். தற்போது சுந்தர் சி இயக்கத்தில், வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் நடித்துள்ளார் சிம்பு.
படம் வரும் பிப்ரவரி ஒண்ணாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நடிகர் சிம்புவிற்கு ரசிகர்கள் ஆதரவு அதிகம் உள்ளது. ஆரம்பகட்டத்தில் இருந்து பல சர்ச்சைகளை சிம்பு சந்தித்தபோதும் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கூட்டம் அப்படியே உள்ளது.
சமீபத்தில் கூட சிம்பு பாலபிஷேகம் பற்றி பேசி சர்ச்சை ஏற்படுத்தியபோது சிம்பு ரசிகர்கள் கடலில் பேனர் வைப்பது, அண்டா நிறைய பாலபிஷேகம் செய்தது என தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் மற்றொரு வெறித்தனமான சிம்பு ரசிகரின் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகிறது. அந்த புகைப்படத்தில் தனது தலையில் சிம்பு என எழுதியுள்ளார் அந்த ரசிகர். இதோ அந்த புகைப்படம்.