#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரஜினியுடன் போட்டி போட களமிறங்கிவிட்டார் சிம்பு! #STR ரசிகர்கள் உற்சாகம்!
சிம்பு என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி நீண்ட நாட்கள் நடிக்காமல் இருந்த சிம்பு கடைசியாக செக்கச் சிவந்த வானம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் உச்ச நிலைக்கு வந்துள்ளார். செக்கச் சிவந்த வானம் படத்தில் அவருடைய நடிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் சிம்பு சுந்தர்சி இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று அந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. லைக்கா ப்ரொடெக்ஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு "வந்தா ராஜாவாதான் வருவேன்" என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சிம்புவின் ரசிகர்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடும் விதமாக இது அமைந்துள்ளது.
சுந்தர்சி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் சிம்பு, அவரது நண்பர் பிக்பாஸ் மஹத் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ரஜினியின் பேட்ட, அஜித்தின் விசுவாசம் ஆகிய படங்களுடன் போட்டியிட சிம்புவின் "வந்தா ராஜாவாதான் வருவேன்" படமும் களத்தில் இறங்கியுள்ளது. இதனால் தமிழ் ரசிகர்களுக்கு வரும் பொங்கல் மிகவும் இனிப்பாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.