#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நான் மாத்தி பேசல, எல்லோரையும் மாத்தணும்னுதான் பேசினேன்! நடிகர் சிம்பு!
லைகா நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வந்தால் ராஜாவாகத்தான் வருவேன். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட நிலையில் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு ரசிகர்கள், சுந்தர் சி ரசிகர்கள் என அனைவரும் படம் பார்க்க மிகப்பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தனது படத்திற்கு பாலபிஷேகம் வேண்டாம், கட்டவுட் வைக்கவேண்டாம் என சிம்பு கூறிய நிலையில் அதே சிம்பு சில நாட்கள் கழித்து மிகப்பெரிய அளவில் கடவுட் வையுங்கள், பாக்கெட் பால் ஊத்தவேண்டாம், அண்டா நிறைய பாலபிஷேகம் செய்யுங்கள் என கூறி வெளியிட்ட வீடியோ வைரலானது.
இந்நிலையில் மறைந்த தனது ரசிகர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற நடிகர் சிம்பு அவர்களது பெற்றோரிடம் கதறி அழுதார். அதன்பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த சிம்புவிடம் பத்திரிகையாளர்கள் சிம்புவின் வீடியோ குறித்து கேள்வி எழுப்பினர். அவர்களது கேள்விக்கு பதில் கூறிய சிம்பு, நல்லவிதமாக கூறிய வீடியோ யாரிடமும் ரீச் ஆகவில்லை, அதனால்தான் இரண்டாவது வீடியோ வெளியிட்டேன். நான் அந்த வீடியோவில் மாத்தி பேசவில்லை, எல்லோரையும் மாத்த வேண்டும் என்றுதான் பேசியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நான் அண்டா நிறைய எனது கட்டவுட்டுக்கு பால் ஊத்த சொல்லவில்லை, பாலை அண்டாவில் ஊத்தி எல்லோர்க்கும் கொடுங்கள் என்றுதான் கூறியதாக சிம்பு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.