பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இந்தியன் 2 வில் சிம்பு நடித்திருந்தால், இதுதான் அவரது கதாபாத்திரம்? வெளியான தகவல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். என்னதான் சிம்பு மீது அவ்வப்போது பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தாலும் அதிகமாக சர்ச்சைகள்தான் வருகின்றன. சிம்பு நயன்தாரா காதல், சிம்பு ஹன்ஷிகா காதல், பீப் பாடல், தற்போது அண்டாவுல பால் ஊத்துங்க போன்ற பல சர்ச்சைகள் அவருக்கு எதிராக உள்ளன.
தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் வந்தால் ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலகாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தியன் 2 படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், படக்குழுவினருடன் சிம்பு ஒத்துவராததால் இந்தியன் 2 படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
சிம்பு இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தால் அவருக்கு என்ன கதாபாத்திரம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சிம்பு நடிகர் கமலஹாசனுக்கு பேரனாக நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது சிம்புக்கு பதில் நடிகர் சித்தார்த் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழுவினரிடம் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களும் வராதது குறிப்பிடத்தக்கது.