#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிம்புவுடன் இணையும் பிக் பாஸ் மகத். இயக்குனரின் திடீர் முடிவு; இன்ப அதிர்ச்சியில் மகத்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் மகத். அவர் தற்போது இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து நடிக்கயிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
நடிகர் சிம்பு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது நடித்து வரும் புதிய படமானது ஜார்ஜியாவில் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ்-2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் மகத் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர் ஏற்கனவே தல அஜித்துடன் மங்காத்தாவிலும் தளபதி விஜயுடன் ஜில்லா படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் அட்டரிந்திகி தரேடி என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து மகத் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அதிக ஆர்வமாக இருக்கிறேன். மற்ற தகவல்கள் விரைவில் வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Here we go 😉 #Excited😁 more details coming up soon!!! 👊🏻 pic.twitter.com/bmFljgOUxc
— Mahat Raghavendra (@MahatOfficial) October 10, 2018