#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாடகி சித்ராவின் இறந்த மகள் நந்தனாவை குறித்து சித்ரா வெளியிட்ட பதிவு! கண்கலங்க வைக்கும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் சின்னக்குயில் என அழைக்கப்படுபவர் பாடகி சித்ரா. தமிழ் சினிமாவுக்காக இதுவரை ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ளார் சித்ரா.
தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்கள் பாடியவர் சித்ரா
பாடகி சித்ரா1988ஆம் ஆண்டு விஜயசங்கர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நந்தனா என அழகிய ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
ஆனால் எதிர்பாராத விதமாக சித்ராவின் மகள் நந்தனா கடந்த 2011ம் ஆண்டு துபாயில் நீச்சல்குளத்தில் விழுந்து மரணம் அடைந்தார். இந்த செய்தி சித்ரா குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
தனது மகள் இறந்த சோகத்தை மறக்க, தன்னால் முடிந்த அளவுக்கு சமூக சேவைகள் செய்து வருகிறார் சித்ரா. இந்நிலையில் தனது மகள் நந்தனாவின் பிறந்தநாள் ஆன நேற்று, மகளுடன் உள்ள அழகிய புகைப்படத்தை பதிவு செய்து தனது மகளுக்கு வாழ்த்து கூறியுள்ளார் சித்ரா. இதோ அந்த புகைப்படம்....