பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தன் மீதான பாலியல் புகார்கள் தொடர்பாக 3 மாதங்களுக்குப் பிறகு வாய் திறந்த பின்னணி பாடகர்!
கடந்த ஆண்டு #MeToo என்ற அமைப்பின் மூலம் பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் சமூகவலைதளங்களில் பரவி வந்தன. இதில் மிகவும் புகழ் பெற்றவர் பாடகி சின்மயி. அவர் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் மட்டுமல்லாமல் பிற பெண்களின் வேதனைகளையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.
இவ்வாறு பாலியல் புகாரில் சிக்கியவர்களில் ஒருவர் பிரபல பின்னணி பாடகர் கார்த்திக். சில வருடங்களுக்கு முன்பு பாடகர் கார்த்திக்கை சந்தித்தபோது அவர் என்னிடம் தவறாக பேசி என்னை தொட முற்பட்டார். இதேபோல் அவர் பல பெண்களிடமும் நடந்து கொண்டுள்ளார் என ஒரு பெண் பாடகர் கார்த்திக் குறித்து டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதனை சின்மயி ரீட்வீட் செய்து அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.
இந்நிலையில் தனது தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த பாடகர் கார்த்திக் தன் மீது எழுந்துள்ள புகார்களுக்கு தற்பொழுது விளக்கமளித்துள்ளார்.
"சமீபகாலமாக ட்விட்டரில் என்னைப் பற்றி சில புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. நான் என் மனசாட்சிக்கு உண்மையாகவே இருந்து வருகிறேன். நான் இதுவரை எந்த ஒரு நபரையும் மனம் நோகும்படி செய்ததில்லை. யாரையும் அவர்களது எதிர்ப்பைக் கடந்து தொல்லை செய்தது இல்லை. நான் வேண்டுமென்றே யாரையும் அசௌகரியமாக உணரவோ அல்லது பாதுகாப்பற்று உணர்வுடனோ இருக்கச் செய்ததில்லை. கடந்த காலங்களில் என் செய்கைகள் காரணமாக எவராவது வருத்தப்படும்படி இருந்திருந்தால், அவர்கள் என்னை நேரடியாக அணுகுமாறு வேண்டுகிறேன். எனது தவறுகளுக்கான விளைவுகளை எதிர்கொள்ளவும் தயாராகவே இருக்கிறேன்" என ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
— Karthik Music Exp (@singer_karthik) February 18, 2019