#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்.. கியூட் ஜோடி சித்து-ஸ்ரேயாவா இது! பள்ளி பருவத்தில் எப்படி இருந்துருக்காங்க பார்த்தீங்களா! வைரலாகும் புகைப்படம்!!
கடந்த ஆண்டு இறுதியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அவ்வாறு காதலித்து திருமணம் செய்து கொண்ட அழகிய ஜோடிகளில் ஒன்றுதான் சித்து- ஸ்ரேயா ஜோடி. இவர்கள் சிறந்த ஜோடிகளாக மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்து வருகின்றனர்.
சித்து மற்றும் ஸ்ரேயா இருவரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். தொடரில் கணவன் மனைவியாக நடித்து வந்த இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
ஸ்ரேயா தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரஜினி என்ற தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சித்து விஜய் டிவியில் ராஜாராணி 2 தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகும். இந்த நிலையில் தற்போது அவர்களது சிறு வயது பள்ளி பருவப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் செம க்யூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.