#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திய சிவகார்த்திகேயன்.. வாயடைத்து நிற்கும் ஏ ஆர் முருகதாஸ்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தமிழில் பல வெற்றித் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சின்னத்திரையில் இருந்து தனது திரைத்துறை பயணத்தை ஆரம்பித்து, வெள்ளி திரையில் கதாநாயகனாக கலக்கி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'மாவீரன்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது. படத்திற்கு பிறகு 'அயலான்' திரைப்படம் வெளியாகியுள்ளது. இது போன்ற நிலையில், தற்போது ஏ ஆர் முருகதாஸுடன் இணைந்து பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகவிருக்கிறார்.
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிற்கு ரஜினிகாந்தின் 'தர்பார்' படத்தின் தோல்விக்கு பின்பு எந்த பட வாய்ப்புகளும் அமையவில்லை. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இப்படம் டோலிவுட் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
இது போன்ற நிலையில், சிவகார்த்திகேயன் இதுவரை படங்களில் நடிப்பதற்கு 25 முதல் 30 கோடி சம்பளமாக பெற்றுக் கொண்டிருந்தார். ஏ ஆர் முருகதாஸின் படத்தில் நடிப்பதற்கு 40 முதல் 45 கோடி சம்பளம் கேட்டதாக தெரியவந்துள்ளது. இதனை கேட்டு ஏ ஆர் முருகதாஸ் செய்வதறியாமல் முழிபிதுங்கி நிற்கிறாராம். இச்செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.