#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. சிவாஜி படத்தில் இந்த சீனில் நடித்துள்ளாரா நடிகை சுனைனா! தீயாய் பரவும் யாரும் பார்த்திராத நீக்கப்பட்ட காட்சி !!
கடந்த 2007ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் சிவாஜி. இப்படம் பெரும் வசூல் சாதனையும் படைத்தது. சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேயா, மற்றும் விவேக், சுமன் என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
மேலும் இத்திரைப்படத்தில் நடிகை சுனைனாவும் ஒரு காட்சியில் நடித்துள்ளார். அதாவது ரஜினி மற்றும் விவேக் கோயிலுக்கு பெண் பார்க்க செல்லும்போது புடவையில் குடும்ப பெண்ணாக கோவிலுக்குள் வந்து பின்னர் அங்கிருந்து வெளியேறியதும் பயங்கர மாடர்னாக மாறும் பெண்ணாக சுனைனா நடித்திருந்தார். ஆனால் அக்காட்சி படத்தில் காட்டப்படவில்லை நீக்கப்பட்டது. இந்தநிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சுனைனா காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மாசிலாமணி, வம்சம், சமர் மற்றும் அண்மையில் ட்ரிப் என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சில முன்னணி நடிகர்களின் படங்களில் சிறுசிறு முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.