பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
லிப்லாக், சுயஇன்ப காட்சி பரபரப்பு நடிகை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியா! வெளியான புதிய படத்தின் அப்டேட்.!
தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சீமராஜா திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இருவரும் 'வேலைக்காரன்' படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்த படம் மிஸ்டர் லோக்கல்.
இந்த படமும் தோல்வி படமானதால் அடுத்தடுத்த படங்களில் மிகுந்த கவனம் எடுத்து நடித்து வருகிறார். கதை மற்றும் படத்தில் நடிப்பவர்கள் முதற்கொண்டு மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அடுத்து நான்கு இயக்குநர்களிடம் இணைந்து மிக வித்தியாசமான கதை களன்களில் நடிக்கிறார்.
அதில் ஒன்று தன் நண்பர் விக்னேஷ் சிவன் படம் வித்தியாசமான ப்ளாக் காமெடி படமாக அது இருக்கும் என்று தெரிகிறது. இந்த படத்தில் பாலிவுட்டில் லிப் லாக் மற்றும் சுய இன்பம் காட்சிகளில் நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கீரா அத்வானியை சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
லஸ்ட் ஸ்டோரிஸ் எனும் இணையதளத்தில் வெளியான படத்தின் மூலம் பிரபலமானவர் பாலிவுட் நடிகை கியரா அத்வானி. அதன்பின்னர் தோனியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான MS தோனி படத்தில் நாயகியாக நடித்திருந்தார் கியாரா அத்வானி.
இவர் நடித்த லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸ் மிகவும் பிரபலமானது. இந்த கதை அந்தரங்க விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். இந்த கதையில் கதையின் நாயகி சுயஇன்பம் காண்பது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இந்த காட்சி அனைவரிடமும் பிரபலமான ஒன்று.