#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தல அஜித் போல களமிறங்கும் சிவகார்த்திகேயன்! பாராட்டிவரும் பொதுமக்கள்!
தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சீமராஜா திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இருவரும் 'வேலைக்காரன்' படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் மிஸ்டர் லோக்கல்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் இந்த படத்தில், ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இபபடத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் படக்குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், சிவகார்த்திகேயன் மற்றும் ராதிகா டூவீலரில் பயணிக்கின்றனர். அப்போது சாலையில் இருப்பவர்கள் அனைவரும் தங்கள் ஹெல்மெட்டை விமர்சிப்பதாக ராதிகா கூறுகிறார். அதற்கு, நாம் சரியாக இருந்தாலே நம் ஊரில் ஒருமாதிரி தான் பார்ப்பார்கள். நமக்கு தல தான் முக்கியம் என்று சிவகார்த்திகேயன் பதிலளிக்கிறார்.
Always better to take our mom's advice 🤱 Learn things from our #MrLocal 😉😉#MrLocalOnMay17 #MrLocalin3days @Siva_Kartikeyan #Nayanthara @rajeshmdirector
— Studio Green (@StudioGreen2) 14 May 2019
@actorsathish @iYogiBabu @hiphoptamizha @SF2_official @DoneChannel1 @malikstreams @thinkmusicindia pic.twitter.com/NFlQrqv08L
அவர்கள் வெளியிட்ட அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படத்தில் அஜித் ஹெல்மெட் அணிந்து சென்றது, காரில் சீட் பெல்ட் அணிந்து பயணிப்பது என காட்சிகள் இடம்பெற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார் தல அஜித். அஜித் செய்த அதே செயலை, சிவகார்த்திகேயனும் தனது படத்தில் செய்திருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.