செம க்யூட்டாக இருக்கடா... வெளியான சிவகார்த்திகேயன் மகள் புகைப்படம்... குவியும் எக்கச்சக்கமான லைக்ஸ்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இதுவரை டான் திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தனது தந்தையின் நினைவாக குகன் தாஸ் என பெயர் வைத்தனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது மனைவியின் தங்கை சீமந்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டிருக்கிறார்.
அந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வைரலாக்குகின்றனர். அவரது மகள் அதில் கியூட்டாக இருக்க ரசிகர்கள் ஆராதனாவுக்கு அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.