#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிவகார்த்திகேயனுக்கு இவ்வளவு தீவிர ரசிகர்களா? என்ன செய்துள்ளார்கள் என்று பாருங்கள்!
சீமராஜா திரைப்படம் தோல்வியை அடுத்து தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். நடிப்பையும் தாண்டி தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள நடிகர் சிவா கனா என்ற படத்தையும் தயாரித்துள்ளார். கனா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மாபெரும் வெற்றியும் அடைந்தது.
தற்போது சிவா மனசுல சக்தி, ஓகே ஓகே, பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற படங்களின் இயக்குனர் ராஜேஷுடன் Mr . லோக்கல் என்ற படத்தில் நடித்துவருகிறார் சிவா. இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார்.
இந்நிலையில் Mr . லோக்கல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோட்டு ஷூட்டு அணிந்து, கன்னத்தில் கை வைத்தவாறு மற்றொரு கையில் டீ கிளாஸ்சுடன் கெத்தாக போஸ் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் போஸ்டர் வெளியான சில மணி நேரங்களில் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பேனர் அடித்து அதனை சமூசாக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இவ்வளவு தீவிர ரசிகர்களா என ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர் வலைதளவாசிகள்.
Our #TirupurSKFC Celebration Start 😍🎊🎉#MrLocal @Siva_Kartikeyan Anna 😊@StudioGreen2 @rajeshmdirector pic.twitter.com/Yj2tM32Jh2
— Tirupur SKFC (@TirupurSkfc) February 2, 2019
#MrLocal first-look flex by #KeralaSKFC 🎉🎊🤩@rajeshmdirector @StudioGreen2 pic.twitter.com/BSU28y53fU
— All India SKFC (@AllIndiaSKFC) February 2, 2019