பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அம்பானியுடன் கைகோர்க்கும் நடிகர் சிவகார்த்திகேயன்! அடுச்சது லக்கு!
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இவர்களுக்கு அடுத்தபடியாக பேசப்படுபவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் ஒரு மிமிக்கிரி கலைஞனாக அறிமுகமாகி தனது திறமையால் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். தனது திறமையாலும், சொந்த முயற்சியாலும் இந்த அளவிற்கு வளந்துள்ளார் சிவா.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய மெரினா திரைப்படத்தில் அறிமுகமான இவர், கடைசியாக சீமராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள சிவகார்த்திகேயன் கனா படத்தை தயாரித்துள்ளார். மேலும் அடுத்தடுத்த படங்களில் வரிசையாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தொழிலதிபர் அம்பானி ஏற்கனவே சில படங்களை ஹிந்தியில் தயாரித்துள்ளார். தற்போது அந்த தயாரிப்பு நிறுவனம் தமிழுக்கு வரப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த தயாரிப்பின் கீழ் முதல் படத்தை சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கவுள்ளதாகவும், சிவகார்த்திகேயன் மட்டுமின்றி விஜய் சேதுபதி நடிக்கும் படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்.