#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
படு லோக்கலாக வெளியான சிவகார்த்திகேயன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சீமராஜா திரைப்படம் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இருவரும் 'வேலைக்காரன்' படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் Mr . லோக்கல்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறிவித்திருந்தது.
அதன்படி Mr . லோக்கல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த போஸ்டரில் கோட் சூட் போட்டுக்கொண்டு, சோபாவில், கால் வைத்து கொண்டு செம ஸ்டைல்லாக அமர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன், மேலும் அவருடைய கையில் லோக்கல் டீ -யும் உள்ளது. தற்போது இந்த போஸ்டர் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
.@kegvraja 's #Sk13 is Mr. Local ! 😉@Siva_Kartikeyan Leading as #MrLocal With Lady superstar #Nayanthara 😍
— Studio Green (@StudioGreen2) February 2, 2019
A Fun Filled Entertainer from @rajeshmdirector 🎊🎉
Ft. @realradikaa @hiphoptamizha @actorsathish @iYogiBabu @dineshkrishnanb @vivekharshan @DoneChannel1 @thinkmusicindia pic.twitter.com/gm0DX968cJ