#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு? பேறே சூப்பரா இருக்கே!
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் Mr . லோக்கல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
இந்நிலையில் Mr . லோக்கல் படத்தை அடுத்து இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிக்கின்றார் சிவகார்த்திகேயன். இதுவரை பேயடித்தபடாத இந்த படத்திற்கு 'ஹீரோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் தலைப்பு பற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இன்னும் வெளிவராத நிலையில் இப்படத்திற்கு 'ஹீரோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பிரபல வலைப்பேச்சு யுடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது.
ஒரு படத்திற்கு தலைப்பு மிகவும் முக்கியம். ஹீரோவாக நடிப்பது ஒருபக்கம் இருந்தாலும், 'ஹீரோ' என்கிற தலைப்பே சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருப்பது அவருக்கு மிகுந்த மகிழிச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.