#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாபெரும் வெற்றி படத்தை மிஸ் செய்த சிவகார்த்திகேயன்! இது ஒரு காரணமா?
இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு மிமிக்கிரி கலைஞராக அறிமுகமாகி இன்று தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக மாறிவிட்டார் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களும் மாபெரும் வெற்றிபெறுவதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுகிறது.
தற்போது இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் Mr . லோக்கல் என்ற படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அடுத்ததாக இயக்குனர் மித்ரன் இயக்கத்திலும் நடித்துவருகிறார் சிவா. இந்நிலையில் அதிர்ச்சியான ஒரு தகவலை கூறியுள்ளார் பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல்.
பாலாஜி சகதிவேல் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் வழக்கு எண் 18/9 . இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிக் பாஸ் புகழ் ஸ்ரீ நடித்திருப்பார். முதலில் இந்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைப்பதாகத்தான் இருந்ததாம்.
ஆனால், சிவகார்த்திகேயன் முகம் சற்று நெகிழ்ச்சியான ரோலுக்கு ஒத்து வராது என்பதால் ஸ்ரீயை நடிக்க வைத்ததாக படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஒரு மேடையில் கூறியுள்ளார்.