#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வளைகாப்புக்கு வந்தவர்களுக்கு சோனம் கபூர் கொடுத்த இன்ப அதிர்ச்சி! கிப்ட்டாக என்ன கொடுத்துள்ளார் தெரியுமா??
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் சோனம் கபூர் கடந்த 2018-ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹூஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை சோனம் கபூர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர்.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அவர் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் பேபிமூனுக்காக இத்தாலியின் புளோரன்ஸ் நகருக்குசென்றுள்ளார். அந்த புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் அவர் கணவர் ஆனந்த் அஹூஜாவுடன் லண்டனில் தனது வளைகாப்பு விழாவை கொண்டாடியுள்ளார்.
அந்த விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு சோனம் கபூர், ஆனந்த் அஹூஜா தம்பதியினர் அசத்தலான பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். அதாவது விழாவிற்கு வந்த விருந்தினர்களுக்கு அவர்களது பெயர் எழுதப்பட்ட கைக்குட்டையும், செயினையும் பரிசாக அளித்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.