#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட நம்ம சோனியா அகர்வாலா இது... உடல் எடை குறைந்து ஆளே மாறிட்டாரே... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!
தமிழ் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். அதனை தொடர்ந்து கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே, ஒரு நாள் ஒரு கனவு போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
அதனை தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2010 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சில காலம் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்தார் சோனியா அகர்வால்.
அதனைத் தொடர்ந்து சோனியா அகர்வாலுக்கு சரியாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் அவர் துணை கதாபாத்திரம் மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். தற்போது உடல் எடை குறைந்து ஆளே மாறியுள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
— Sonia aggarwal (@soniya_agg) December 7, 2022