#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எழுத முயன்ற எஸ்.பி.பி.! மகிழ்ச்சியுடன் அவரது மகன் சரண் வெளியிட்ட தகவல்!
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள எம்ஜிஎம் தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 21 நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் அவர் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அறிக்கை வெளியானது. இந்நிலையில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தனைகள் மேற்கொண்டு உருக்கமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், மயக்க நிலையில் இருந்து அவர், 90 சதவீதம் மீண்டதாக வெளியான செய்தி, அனைத்து தரப்பினருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது. தொடர்ந்து, தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையின் நேற்றைய அறிக்கையில், எஸ்.பி.பி., உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடல் நிலை சீராக உள்ள நிலையில், வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரால் சுயநினைவுடனும், சொல்வதை புரிந்து கொள்ளவும் முடிகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், எஸ்.பி.பி. மகன் சரண் கூறுகையில், நான் மருத்துவமனைக்கு சென்றேன். என்னிடம் ஏதோ சொல்ல, எழுதிக் காட்ட நினைத்தார். ஆனால், அவரால் பேனாவை சரியாகப் பிடிக்க முடியவில்லை. ஆனாலும் இந்த வாரத்தில் பேனாவை பிடித்து எழுதிக் காட்டுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.