பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வானத்தைப் போல தொடரில் பாசக்கார அண்ணன் புதிய சின்ராசு இவர்தானா.! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!
சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகவும், பல திருப்பங்களுடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு மக்களைக் கவர்ந்து பெருமளவில் வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்று வானத்தைப் போல. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இத்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்த தொடரில் ஆரம்பத்தில் அண்ணன் சின்ராசு கதாபாத்திரத்தில் தமன்குமார் மற்றும் தங்கை துளசி ரோலில் ஸ்வேதா ஆகியோர் நடித்து வந்தனர்.
இந்த நிலையில் திடீரென துளசி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்வேதா ஒரு சில காரணங்களால் தொடரை விட்டு விலகினார். அதனை தொடர்ந்து தற்போது மான்யா ஆனந்த் என்பவர் துளசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் வானத்தைப்போல தொடரிலிருந்து பாசக்கார அண்ணன் சின்ராசுவாக நடித்து வந்த தமன்குமாரும் விலகியதாக தகவல்கள் பரவியது.
பின்னர் அவருக்கு பதிலாக, புதிய சின்ராசுவாக நடிகர் ஸ்ரீ நடிக்கவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில் அவர் தற்போது வானத்தைப்போல சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு நடிகர் ஸ்ரீ ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி என்ற தொடரில் நடித்திருந்தார்.