பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ரொம்ப சந்தோசமா இருந்தோம்.! ஆனா.. பிபி ஜோடிகள் நிகழ்ச்சியால் சுஜா-சிவா ஜோடிக்கு நேர்ந்த சோகம்! ஷாக் தகவல்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே ஏகப்பட்ட வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது. விரைவில் பிக்பாஸ் சீசன் 6 துவங்கப்படவுள்ளது. இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களின் நடனத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் முதல் சீசனில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் வெற்றி பெற்றனர். அதனை தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வந்த பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 கடந்த சில வாரம் முடிவடைந்தது. இதில் பாவனி- அமீர் மற்றும் சுஜா வருணி அவரது கணவர் சிவகுமார் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து சுஜா வருணி மற்றும் சிவக்குமார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளனர். அப்பொழுது அவர்கள் பேய்-கடவுள் சுற்றில் நடனமாடியபோது சுஜா கீழே விழுந்துவிட்டார். அப்பொழுது அவரை அறியாமலேயே யூரின் போய்விட்டார். பின் அடிக்கடி தலைசுற்றுகிறது, வாந்தி வருகிறது என கூறினார். பிறகுதான் செக் செய்தபோது சுஜா கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதனை கேட்டதும் எங்களுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. பின் மருத்துவரின் ஆலோசனைப்படி சுஜா நடனமாடினார். ஆனால் திடீரென சுஜாவுக்கு பீலிடிங் ஆக ஆரம்பித்தது. மருத்துவரிடம் சென்று கேட்டபோது குழந்தை மிஷ்கரேஷ் ஆகிவிட்டது என்று சொன்னார்கள். நாங்கள் மிகவும் மனமடைந்து விட்டோம். பின் மருத்துவர்கள் சுஜாவை முழு ஓய்வில் இருக்கக்கூறினர். ஆனால் அடுத்த ரவுண்டுக்கு மூன்று நாட்களே இருந்ததால், சுஜா நடனமாடி இருந்தார். இது யாருக்கும் தெரியாத விஷயம் என வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.