#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சன் டீவியில் வருகிறது பிரமாண்ட புது சீரியல்..! இன்னும் 9 நாட்களில்..! ஆர்வத்துடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!
இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. சன் தொலைக்காட்சியின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றால் அது மிகையாகாது. புது புது தொடர்கள் என நாளுக்கு நாள் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துவருகிறது சன் டிவி.
இந்நிலையில் வரும் ஜனவரி 27 முதல் புது மெஹா தொடர் ஒன்றை ஒளிபரப்ப உள்ளது சன் டிவி. நடிகை ராதிகா தயாரித்து, நடித்து மாபெரும் வெற்றிபெற்ற சித்தி தொடரின் இரண்டாம் பாகம்தான் வரும் ஜனவரி 27 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. முதல் பாகத்தில் நடிகர் சிவகுமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்தில் அவரது இடத்தை நடிகர் பொன்வண்ணன் நிரப்பியுள்ளார்.
பட்டி தொட்டியெங்கும் மாபெரும் வெற்றிபெற்ற முதல் தொடர் சித்தி என்றே கூறலாம். இதன் இரண்டாம் வாக்கம் விரைவில் வர இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த புது தொடர் வரும் ஜனவரி 27 முதல் இரவு 9 மணிக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகவுள்ளது.