#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சன் டீவியில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்! களத்தில் இறங்கிய கலாநிதி மாறன் மகள் காவியா!
தமிழகம் மட்டும் இல்லது இன்று இந்தியா முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனம் என்றால் அது சன் தொலைக்காட்சி நிறுவனம்தான். இன்று இந்திய அளவில் அதிக பார்வையாளர்களை கொண்ட தொலைக்காட்சி வரிசையில் முதல் இடத்தில் உள்ளது சன் தொலைக்காட்சி. சன் நிறுவனத்தின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்கு அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள், நிகழ்ச்சிகள், புது புது படங்கள் இவையெல்லாம் ஒரு காரணம்.
என்னதான் நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தாலும், நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளும் இந்த வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணம் என்றே கூறலாம். திரு. கலாநிதிமாறனால் தொடங்கப்பட்ட சன் நிறுவனம் இன்று உலகம் முழுவதும் பறந்து விரிந்துள்ளது.
இந்நிலையில் சன் நிறுவனத்தில் சற்று அதிரடியான மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. இதுவரை சன் நிறுவனத்தின் MD மற்றும் CEO வாக இருந்த விஜய் குமார் வரும் மார்ச் 31 க்கு பிறகு தனது பொறுப்பில் இருந்து வெளியேறுகிறார். அவரது இடத்திற்கு R . மகேஷ் குமார் என்பவர் நிர்வாக இயக்குனராக அதாவது MD ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
MD மற்றும் CEO பொறுப்பில் இருந்து வெளியேறும் விஜய் குமார் வரும் ஏப்ரல் ஒன்றில் இருந்து சன் நிறுவனத்தின் எக்சிகியூடிவ் டைரக்டராக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல சன் நிறுவனத்தை தோற்றுவித்த கலாநிதி மாறனின் மகள் காவியா சன் நிறுவனத்தின் கூடுதல் இயக்குனர் மற்றும் நிர்வாக இயக்குனராக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.