#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சன் டிவியில் இன்று இரவோடு முடிவடையும் இரண்டு பிரபலமான சீரியல்கள்! எந்தெந்த சீரியல்கள் தெரியுமா? கடைசி கட்டத்தை மிஸ் பண்ணிடாம பாருங்க
விரைவில் புது சீரியல்கள் வர இருக்கும் நிலையில் இன்று ஒரே நாளில் இரண்டு பிரபலமான சன் டிவி தொடர்கள் முடிவடைகிறது.
இந்திய அளவில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்று சன் டிவி. சன் டிவியின் இந்த மாபெரும் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்தான் என்றால் அது மிகையாகாது. பட்டிதொட்டி எங்கும் சன் டிவி சீரியலுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்துவந்த காலம் மாறி, தெய்வமகள், நாகினி, நந்தினி என வித்தியாசமான சீரியல்கள் மூலம் இளைஞர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரையும் சீரியல் பார்க்க வைத்தது சன் டிவி. இப்படி பல்வேறு பிரபலமான தொடர்களை ஒளிபரப்பிவரும் சன் டிவி விரைவில் புது சீரியல்களை ஒளிபரப்ப உள்ளது.
இந்நிலையில் நீண்ட நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நாயகி தொடர் இன்றுடன் முடிவடைகிறது. அதேபோல் லாக்டவுன் ஸ்பெஷலாக ஒளிபரப்பாகிவந்த நாகமோகினி தொடரும் இன்றுடன் முடிவடைகிறது.