#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
TRP யை எகிற வைக்க சன் டீவி போட்டுள்ள புது திட்டம்! அடேங்கப்பா! இது புதுசால்ல இருக்கு!
இந்திய அளவில் பிரபலமான தமிழ் தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. புது படம், புது புது சீரியல் என சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை தன் பக்கம் இழுத்துள்ளது சன் டிவி. சன் டீவியின் இந்த அபார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றே கூறலாம்.
மேலும், திரைக்கு வந்து சில மாதங்களே ஆன என்ற வசனத்துடன் சன் டீவியில் ஒளிபரப்பாகும் புது புது படங்களும் சன் டிவியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். அதிலும், பண்டிகை நாட்கள் வந்துவிட்டால் பெரிய நடிகர்களின் வெற்றிப்படங்களை போட்டு தங்கள் TRP யை ஏற்றிவிடுவார்கள்.
அந்த வகையில் வரும் பொங்கலுக்கு தொடர்ந்து 5 நாட்கள் தங்கள் TRP யை எகிற வைக்க சன் டிவி புது திட்டம் ஒன்றை போட்டுள்ளது. அதன்படி தொடர்ந்து 5 நாட்களுக்கு தினமும் மூன்று படங்களை சன் டிவி ஒளிபரப்ப உள்ளது.
அந்த பட்டியலில் வரும் ஜனவரி 15 புதன் அன்று தளபதி நடித்த பிகில், ஜனவரி 16 வியாழன் அன்று சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை, ஜனவரி 17 வெள்ளிக்கிழமை அன்று விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன், ஜனவரி 18 சனிக்கிழமை அன்று அஜித் நடித்த விஸ்வாசம், ஜனவரி 19 ஞாயிற்று கிழமை சூப்பர் ஸ்டாரின் பேட்ட ஆகிய 5 படங்களையும் 5 நாட்களுக்கு தினமும் மாலை 6 . 30 மணிக்கு ஒளிபரப்புகிறது சன் டிவி.