#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் சன் டீவியில் கெத்தாக ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரியமானவள் உமா! இந்தமுறை எந்த சீரியல் தெரியுமா?
இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்ச்சி. சன் தொலைக்காட்சியின் இந்த பிரமாண்ட வளர்ச்சி முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள். சிறுவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை சன் டிவி தொடர்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடர்களில் ஓன்று பிரியமானவள். உமா என்ற கதாபாத்திரத்தில் இந்த தொடரின் நாயகியாக நடித்தவர் பிரவீனா. மிகவும் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்த இவர் பலருக்கு மிகவும் பேவரைட்டான ஹீரோயினாக மாறினார்.
இந்நிலையில் பிரியமானவள் தொடர் சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து உமா வேறு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார். இவர் வேறு ஏதேனும் தொடர்களில் நடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த நிலையில் மீண்டும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் மகராசி என்ற தொடரில் நடிக்க உள்ளார்.
இந்த தொடருக்கான ப்ரோமோ வீடியோ சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. தொடர் ஆரம்பமாகும் நாள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.