#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சன் டிவி சீரியல்களின் நேரம் அதிரடி மாற்றம்! எந்த சீரியல் எப்போ தெரியுமா?
இந்திய அளவில் சன் தொலைக்காட்சி முதல் இடத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான். முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்துவந்த சீரியல் தற்போது இனளஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் பார்க்க தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு சீரியல்கள் மக்கள் இடத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.
அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சில சீரியல்களின் நேரம் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவந்த சந்த்ரகுமாரி தொடர் வரும் மார்ச் 18 ஆம் தேதி முதல் மாலை 6 . 30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சந்த்ரகுமாரி தொடரை பிரபல நடிகை ராதிகா சரத்குமார் தயாரித்து நடித்தும் வருகிறார். அதேபோல மதியம் ஒளிபரப்பாகி வந்த ரோஜா தொடர் இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. சந்த்ரகுமாரி தொடர் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை ராதிகா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#chandrakumari will continue at 6.30pm from 18th March on #SunTV.Please keep watching and enjoying as always🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
— Radikaa Sarathkumar (@realradikaa) March 9, 2019