ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் உலகப் புகழ்பெற்ற தமிழ் படம்; என்ன படம் தெரியுமா?



sunday-sun-tv---world-vairal-movie---friends---nesamani

ட்விட்டரில் நேற்று முதல் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்த '#Pray_for_Neasamani' என்ற ஹேஷ் டாக் பிறகு உலக அளவில் டிரெண்ட் ஆகியது. யார் இந்த நேசமணி என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வந்தது. 
 
ப்ரெண்ட்ஸ் படத்தில் தளபதி விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா ஆகியோர் இடம்பெற்ற  வடிவேலுவின் சுத்தியல் காமெடிதான் சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆகி வந்தது என்பது அனைவருக்கும் தெரியவந்தது. சிறிய தீயாய் பற்றிய '#pray_for_Neasamani' என்ற ஹேஷ் டேக் காட்டுத் தீயாய் பரவியது. சாதாரண நெட்டிசன்கள் துவங்கி திரை மற்றும் விளையாட்டு பிரபலங்களும் இதில் ட்வீட் செய்தனர்.



 

இந்நிலையில் விஜய், சூர்யா, வடிவேலு நடிப்பில் காமெடி, செண்டிமெண்ட் என உருவான ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தை வரும் ஞாயிறு அன்று மாலை 3 மணிக்கு ஒளிபரப்ப உள்ளதாகவும் சன் டிவி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. 

அதோடு அந்த புரோமோவில் “நேசமணி நலமாக உள்ளார். வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு உங்களை காண வருகிறார்.” என வீடியோவை பதிவிட்டுட்டுள்ளது.