#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சன்னி லியோனின் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.! வாரத்துல 2 நாள் இனி ஜாலி தான்.!
நடிகை சன்னி லியோன் தமிழில் தொகுப்பாளினியாக களமிறங்கி இருப்பது தமிழ் ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீரியல்கள் எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்கிறதோ? அதே அளவிற்கு ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்களை வெகுவாக கவருகிறது என்றால் அது மிகையாகாது. சமையல், பாட்டு, நடனம் மற்றும் பிக் பாஸ் என்று பல ஹிட்டான ரியாலிட்டி ஷோக்களே அதற்கு உதாரணம்.
அதே வரிசையில் தற்போது எம் டிவி ஒரு புதுவித நிகழ்ச்சியை ஜியோ சினிமாவின் ஓட்டிடி தளத்திலும் ஒளிபரப்பு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் பெயர், ‘Splitsvilla X5: ExSqueeze Me Please’ என்பதாகும். இது ஒரு டேட்டிங் ஷோ.
இந்த நிகழ்ச்சியை நடிகை உர்ஃபி ஜாவத் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியவருடன் சேர்ந்து இப்போது சன்னிலியோன் தொகுத்து வழங்க ஆரம்பித்து இருக்கிறார். இதன் மூலமாக தமிழில் அவர் முதல் முறையாக தொகுப்பாலினியாக அவதரிக்கிறார்.
21 இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை கொண்டு தங்களது இணையை கண்டுபிடிக்கும் விதமான இந்த நிகழ்ச்சி இளைஞர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் மாலை 7 மணிக்கு ஜியோ சினிமா மற்றும் எம் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.