#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ராணி இரவு மட்டும் தான் இப்படி.. கவர்ச்சி நடிகை சன்னிலியோன் படத்தின் கவனம் ஈர்க்கும் டீசர்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிப்பில் இயக்குனர் யுவன் இயக்கியுள்ள திரைப்படம் "ஓ மை கோஸ்ட்". இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், ஜி.பி.முத்து, குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தை வாவ் மீடியா எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே. சசிகுமார் மற்றும் வீரசக்தி இணைந்து தயாரித்துள்ளனர். மேலும், இப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் ஆக்ஷன், காமெடி பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமூகவளைதலங்களில் பரவி அனைவரது கவனத்தையும் முழுவதுமாக ஈர்த்து வருகிறது. அத்துடன் நல்ல வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.