பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என் உடை., என் உரிமை.. உங்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.. ஆடையை விமர்சித்தவருக்கு தடாலடியாக பதில் கூறி அதிரவைத்த பூஜா..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தவர் பூஜா வைத்தியநாத். இதன் பின்னர் இவர் சினிமாவிலும் பாடத்தொடங்கிய நிலையில், தமிழில் பல படங்களில் பாடி வருகிறார்.
சில சமயங்களில் இவர் மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை பதிவிடுவார். ஆனால் அதனை சிலர் ரசித்தாலும் பலரும் இந்த ஆடை உங்களுக்கு செட் ஆகவில்லை என்றும், இதையெல்லாம் எதுக்கு போடுறீங்க? என்றும் கருத்து பதிவிட்டு வந்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த பூஜா, "சிலர் எனது உடையை விமர்சிக்கின்றனர். எனது விருப்பத்திற்கும், வசதிக்கும் ஏற்ப நான் உடை அணிகிறேன். உங்களை மகிழ்விக்க இந்த உடை கிடையாது. இதுபோன்ற உடையை அணையாதே.
இது உனக்கு பொருந்தாதே என்று கூற உங்களுக்கு எந்த வித உரிமையும் கிடையாது. என் உடல். என் ஆடை. என் மகிழ்ச்சிக்காக நான் அணிகிறேன். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சமூகவலைத்தளத்தில் என்னை பின்தொடர வேண்டாம்" என பதில் தெரிவித்துள்ளார்.