பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அட.. குட்டி பையனா மாஸ் காட்டிய கப்பீஸ் பூவையார் இப்போ என்ன பண்றாரு தெரியுமா?? செமையா வளந்துட்டாரே!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சிகள் ஏராளம். அவ்வாறு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது வெள்ளித்திரையில் பிரபல பாடகர்களாக உள்ளனர்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் கப்பீஸ் பூவையார். இவர் சினிமாவில் கொரில்லா படத்தில் ஒரு பாடலையும், பிகில் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்தும் பாடியுள்ளார். மேலும் பூவையார் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் உண்டியல் என்ற கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. அதற்கான ப்ரோமோ வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வீடியோவில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூவையாரிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான மாகாபா மற்றும் குரேஷி இருவரும், "நீ என்ன படிக்கிறாய்?" என கேட்டுள்ளனர். அதற்கு அவர் 12வது முடிச்சிட்டு காலேஜ் போறேன் என கூறியதும் அனைவரும் ஷாக்காகியுள்ளனர். மேலும் குரேஷி நேத்துதானே விஜய் சார் இடுப்புல உட்கார்ந்திருந்த அதுக்குள்ளேயும் காலேஜா என சர்ப்ரைஸ் அடைந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.