#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மருத்துவரான நம்ம சூப்பர் சிங்கர் பிரியங்கா! என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது மெல்லிய இசையால் அனைவரையும் கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர் பிரியங்கா.
மேலும் அவர் பல ஜாம்பவான்களுடன் இணைந்து பாடியுள்ளார். ஏராளமான திரைப்படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். மேலும் பிரியங்கா பாடிய பாடல்கள் யூடியூபிலும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. இவ்வாறு தனது இனிமையான குரலால் அனைவரையும் கட்டிப் போட்ட பிரியங்கா பாடகி மட்டுமல்ல பல் மருத்துவரும் கூட.
இந்நிலையில் அவர் ஏழை எளியவர்களுக்கு இலவச பல் சிகிச்சை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் ஏழை மக்கள் மற்றும் சிறுவர்களுக்கு பல் பரிசோதனை செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை கண்ட நெட்டிசன்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.