மீண்டும் ரீ-ரிலீஸாகும் சூர்யாவின் படுதோல்வி திரைப்படம்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!



Surya in Anjan movie re release

கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார்.

மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த நிலையில், பாருங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், படத்தின் திரைக்கதை ஒர்க்கவுட் ஆகாததால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால் இந்த திரைப்படத்தை சமூக வலைத்தளங்களிலும், பத்திரிகைகளிலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது.

Anjan

மேலும், இந்த படத்திற்கு இயக்குனர் லிங்குசாமி கொடுத்த பில்டப்புகளை நம்பி சென்றவர்கள் ஏமாந்ததால், அவரை கடுமையாக விமர்சித்து மீம்ஸ்களாக போட்டு கலாய்த்து தள்ளினர். இந்த படத்தின் தோல்வியால் லிங்குசாமி சில காலம் வெளியில் தலை காட்டாமலே இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அஞ்சான் திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.   இது குறித்து பேசிய இயக்குனர் லிங்குசாமி ஒரு படம் வெற்றி அடைவதற்கும் தோல்வி அடைவதற்கும் சில காரணங்களை உள்ளன. குறுகிய காலத்தில் எடுத்த சில முடிவுகளால் அந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. தற்போது தேவையற்ற காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை புதிய வடிவமாக்கியுள்ளோம் விரைவில் ரீ ரிலீஸாகும் என கூறியுள்ளார்.