குறும்படத்தில் குதித்த நடிகர் சூர்யா! காரணம் இதுதான்!



surya-new-short-flim

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பிற்கென ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் இவர் சினிமா மற்றும் இன்றி பல பொதுநல செயல்களிலும் சமுதாய நலன் கருதி ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் அவர் தற்போது தமிழக அரசுடன் இணைந்து பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டு சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால் இன்றுவரை அவை முழுமையாக பின்பற்றப்படுவதில்லை. மேலும் ஒரு சில கடைகளில் இன்றும் பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகிக்கப்பட்டு வருகிறது.

surya

 இந்நிலையில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகளை குறித்தும், பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதின்  அத்தியாவசியத்தை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குறும்படம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை ஹரிஷ் இயக்கத்தில் ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துளளார். மேலும் மாறலாம் மாற்றலாம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த குறும்படம் 2டி நிறுவனத்தின் யூடியூப்  பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.