#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நீ ஏன் இப்படி பண்ற.? சூர்யா செய்த காரியத்தால் சந்தேகமடைந்த நடிகர் கார்த்தி! பின் அடித்த அதிர்ஷ்டம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட், ரொமான்டிக் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்திலும் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் செம்ம மாஸாக வில்லனாக மிரட்டியுள்ளார். இதற்கு முன்பு அவர் ஜெய்பீம் படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞராக நடித்திருந்த கதாபாத்திரம் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது.
நடிகர் சூர்யா கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்த போது, நீண்ட முடி வளர்ப்பதை பார்த்துவிட்டு அவரது தம்பியும், நடிகருமான கார்த்தி, நான்தான் பொன்னியின் செல்வன் படத்திற்காக நீளமாக முடி வளர்த்துக் கொண்டுள்ளேன். நீ எதற்கு வளர்க்கிறாய் என சந்தேகத்துடன் கேட்டாராம். அதற்கு அவர் முடி அதிகமாக வைத்து ரொம்ப நாளாச்சு. அதான் சும்மா வைச்சு பாக்குறேன் என கூறியுள்ளார்.
ஆனால் இந்த நீண்ட முடியை பார்த்துவிட்டுதான் இயக்குநர் ஞானவேல் ஜெய்பீம் படத்தில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்திற்கு சூர்யா மிகவும் பொருத்தமாக இருப்பார் என கூறி அவரை தேர்வு செய்ததாக பேட்டி ஒன்றில் சூர்யா கூறியுள்ளார்.