#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இயக்குனர் சுசி கணேசனின் வஞ்சம் தீர்த்தாயடா.! பலருக்கும் நடிக்க வாய்ப்பு.! யாரும் மிஸ் பண்ணிடாதிங்க.!
மணிரத்னத்தின் உதவி இயக்குனரான சுசி கணேசன், மணிரத்னம் தயாரித்த பைவ் ஸ்டார் படத்தின் மூலம் 2002-ல் இயக்குனரானார். விரும்புகிறேன், கந்தசாமி, திருட்டுப் பயலே, திருட்டுப் பயலே 2 என பல படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அடுத்த கட்டமாக இந்தியில் திருட்டுப் பயலே படத்தை ரீமேக் செய்து பெரிதும் பிரபலமானார். தற்போது தில் ஹே க்ரே என்ற இந்திப் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இதனையடுத்து தமிழில் அடுத்ததாக ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தினை இயக்குவதாக அறிவித்திருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். 1980-களில் மதுரையில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் தயாராகிறது. இப்படத்தால் ரசிகர்களுக்கு புதுவித அனுபவம் உத்தரவாதம் என்கிறார் சுசி கணேசன். மதுரைப் பின்னணியில் இப்படம் இருப்பதால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் இயக்குனர் சுசிகணேசன், வஞ்சம் தீர்த்தாயடா படத்தில் புதுமுகங்களை நடிக்க வைக்க இருக்கிறார். அதற்கு நடிப்பில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் 20 வயது முதல் 40 வயது உள்ளவர்கள் தங்களுடைய வீடியோக்களை பதிவிட்டு, நடிக்க வாய்ப்பு பெறுவதற்கு இதுவரை எந்த ஒரு இயக்குனரும் கொடுக்காத ஒரு அரிய வாய்ப்பை கொடுத்துள்ளார்.
அதாவது நடிக்க விருப்பம் உள்ளவர்கள் V4MaxTV.com என்ற இணையதளத்தில் பதிவிடவேண்டும். தங்களுக்கு பிடித்த திரைப்படத்தில் உள்ள காட்சிகளை இரண்டு நிமிடத்தில் படமாக்கி அதை பதிவேற்றம் செய்யவேண்டும். அதில், சிறப்பாக நடித்தவர்களை தேர்வு செய்து ’வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தில் நாயகர்களாக நடிக்க வைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.