#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடடா மழைடா அட மழைடா பாட்டுக்கு மேடையில் மீண்டும் இணைந்து நடனமாடிய கார்த்தி, தமன்னா.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் கார்த்திக். இவர் 'பருத்திவீரன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். கிராமத்து கதைக்களத்தைக் கொண்ட இந்த திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற நடிகரானார்.
இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியிருக்கிறார். சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
இது போன்ற நிலையில், தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் 'ஜப்பான்' திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் இதனை அடுத்து கார்த்தி 25 நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கார்த்தி, தமன்னா, லோகேஷ் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து கார்த்தியும், தமன்னாவும் இணைந்து மேடையில் பையா படத்தில் வரும் அடடா மழைடா அட மழைடா எனும் பாடலுக்கு 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களும் ஆட்டம் போட்டு வருகின்றனர்.