#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல நடிகரை காதலிக்கும் தமன்னா.. பத்திரிகையாளர் சந்திப்பில் மனம் திறந்த தமன்னா.?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் 'கேடி' திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
முதல் படம் மிகப்பெரிய வெற்றியடையாவிட்டாலும் தமன்னாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் தமன்னா தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜெயிலர்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் 'லஸ்ட் ஸ்டோரீஸ்2' எனும் சீரியஸில் நடித்திருக்கிறார் தமன்னா. இந்த வெப் தொடர் சமீபத்தில் வெளியானது.
இது போன்ற நிலையில், தமன்னா 'லஸ்ட் ஸ்டோரீஸ்2' வெப்சீரிஸ்சில் நடித்திருக்கும் நடிகரை காதலிப்பதாக செய்தி வெளியானது. இது குறித்து தமன்னா கூறியதாவது, "தொடரின் படப்பிடிப்பின் போது எனக்கு விஜய் வர்மாவின் மீது காதல் ஏற்பட்டது. நான் அதை அவரிடமே கூறினேன். காதலுக்கு புரிதல் மிகவும் அவசியம். சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும். விஜய் வர்மாவிற்கும் எனக்கும் புரிதல் சரியாக இருக்கிறது" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.