பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என் வருங்கால கணவர் இவர்தான்! அறிமுகப்படுத்தி தமன்னா பகிர்ந்த புகைப்படம்! ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி பின் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி, விஜய்சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்ளுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
தமன்னா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்த தமன்னா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவியது. அதாவது அவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்த நிலையில் நடிகை தமன்னா தனது ஸ்டோரியில், எனது வருங்கால பிசினஸ்மேன் கணவரை அறிமுகப்படுத்துகிறேன் என புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தமன்னா ஆண் கெட்டப்பில் உடை அணிந்துள்ளார். இந்த புகைப்படத்தை அவர் திருமணம், வதந்தி, அனைவரும் எனது வாழ்க்கையை எழுதுகின்றனர் என்ற ஹேஷ்டாக்குடன் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில் தமன்னா திருமணம் குறித்த தகவல் வதந்தி என குறிப்பிட்டுள்ளார்.