#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோடிகளில் புரளும் விஜய்!! ரோட்டோரத்தில் படுத்துறங்கும் அவரது தந்தை!! வைரல் வீடியோ..
நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் தனது வாழ்க்கை பயணம் குறித்த காணொளி ஒன்றினை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளநிலையில், தற்போது அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
"யார் இந்த எஸ்.ஏ.சி" என்ற யூடியூப் சேனலை தொடங்கியுள்ள எஸ்.ஏ.சி, இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்து, ஏற்கனவே அந்த சேனலில் புரோமோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தனது வாழ்க்கை பயணம் குறித்த முதல் வீடியோவை அவர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பாய், தலையணையுடன் காரில் வந்திறங்கும் அவர், அங்கிருக்கும் பிளாட்பாரம் ஒன்றில் பாய்யை விரித்து, தனது கதையை தொடங்குகிறார். சினிமா கனவுடன் சென்னை வந்த தான், 47 நாட்கள் பிளாட்பாரத்தில் தங்கியிருந்ததாகவும், அங்கையே வீதிகளிலேயே படுத்துறங்கியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது தான் படுத்துறங்கிய இடத்துக்கு வந்து உறங்கிச் செல்வதை இன்றும் வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவுக்கே தளபதியாக விஜய் இருந்தும், அவரிடம் பல கோடிகளில் சொத்து இருந்தும், இதெற்க்கெல்லாம் அஸ்த்திவாரமாக இருந்த அவரது தந்தை பிளாட்பாரத்தில் இருந்து தனது வாழ்க்கையை தொடங்கியது விஜய் ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளது.