#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதன்முதலாக காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை சுனைனா.!
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் வந்தது.
தொடர்ந்து மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக நடிகர் விஜய் நடித்த தெறி படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் நடிகை சுனைனா. தமிழை தவிர கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது நடிகை சுனைனா வெப் சீரிஸ் தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஆண் நபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். படத்தில் இருப்பவரை நடிகை சுனைனா திருமணம் செய்து கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.