பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சர்க்கார் படத்தின் அனைத்து பாடல்களும் தமிழ் ராக்கர்ஸ்ல் வெளியானது. அதிர்ச்சியில் படக்குழுவினர்!!
சர்க்கார் படத்தின் அனைத்து பாடல்களும் இன்று நடைபெறும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியின்போது வெளியாக உள்ள நிலையில் அனைத்து பாடல்களும் தமிழ் ராக்கர்ஸ் இல் வெளியாகி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் சர்க்கார். இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கள் ட்ராக் பாடலான சிம்டங்கரான் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் பாடலான 'ஒரு விரல் புரட்சி ' சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தொடர்ச்சியாக இப்படத்தை பற்றிய தகவல்கள் தினம் தினம் வந்து கொண்டிருப்பதால் படத்தின் வெளியீட்டு நாளுக்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் இன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. அதனால் இப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தின் அனைத்துப் பாடல்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக தாம்பரம் சாய்ராம் கல்லூரியில் இன்று பிரமாண்ட முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெற்று அனைத்து பாடல்களும் வெளியாக உள்ள நிலையில் தமிழ் ராக்கர்ஸ்ல் நேற்று இப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது