#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
'ராட்சசன்' ஹாலிவுட்டில் ரீமேக் ஆக போகிறதா? மிகுந்த உற்சாகத்தில் படக்குழுவினர்..!
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி தற்சமயம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ராட்சசன். இப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப்படம் பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள் கடத்தப்படுவது அதன் பிறகு நடக்கும் தொடர் கொலைகள் என க்ரைம் த்ரில்லர் கதையை மையமாக வைத்து இப்படம் வெளிவந்துள்ளது. முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இப்படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும் அமலாபால் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள்.
ஜிப்ரான் இசையில், பிவி ஷங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி - ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன .
உத்தம வில்லன் படத்திற்காக பணி புரிந்த ஹாலிவுட் கலைஞர் ஒருவர், ராட்சன் பட இசையமைப்பாளர் ஜிப்ரானிடம், ‘ராட்சசன்’ படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய உரிமம் பெறுவது தொடர்பாக என்னிடம் பேசினார் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாக இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை விஷ்ணு விஷால் பெற்றார். இதனை தொடர்ந்து ராட்சசன் படத்தின் ஹாலிவுட் ரைட்ஸ் கிடைக்கும் பட்சத்தில் ஹாலிவுட்டுக்கு ரீமேக் ஆகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.